போன்சாய் மரத்தின் வகைகள் - 1

போன்சாய் மரம் வளர்ப்பு என்பது நாம் மரத்தைக் கொடுமைப் படுத்துவது போல தோன்றினாலும், இது கலை அழகுக்காக செய்யக் கூடிய விஷயம். நாம் ஒரு போன்சாய் மரத்தை வளர்க்க நினைத்தால் முதலில், அதன் வடிவத்தைத் தீர்மானிக்க வேண்டும். காரணம் என்னவென்றால், ஆரம்பத்தில் இருந்தே வேண்டும் வடிவத்தில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும். மரத்தை செலெக்ட் செய்யும் போதே இதை முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால் எல்லா மரமும், எல்லா வடிவத்திலும் வளராது.

முக்கியமாக 5 வடிவங்கள் உள்ளன. அவை ஃபார்மல் அப்ரைட், இன்ஃபார்மல் அப்ரைட், ஸ்லேண்டிங் ஸ்டைல், கேஸ்கேட் மற்றும் செமி கேஸ்கேட் ஆகும்.

முதலில் ஃபார்மல் அப்ரைட் பற்றி பார்ப்போம்.

இவ்வகை மரமானது, வளர வேண்டுமானால், க்ளைமேட் முதலிய எல்லா விஷயங்களும் ரொம்ப பர்ஃபெக்டாக இருக்க வேண்டும். இதில் மரத்தின் நடுத்தண்டு, நேராக இருக்கும். அது அடி பெருத்தும், நுனி சிறுத்தும் இருக்கும். அதன் கிளைகள், ஒரே அளவில், எல்லா இடங்களிலும் யூனிபார்மாக படர்ந்திருக்கும். இந்த வடிவத்தைக் கொண்டு வருவது சற்றுக் கடினம் தான். ஆனால் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.


லார்ச்சஸ், பைன்ஸ், மேப்பிள்ஸ் ஆகிய மரங்களை இவ்வாறு வளர்க்கலாம். பழ மர வகைகளையும், இயற்கையிலேயே கசாமுசா வென வளரும் மரங்களையும் இவ்விதம் வளர்க்க முடியாது.

படத்திலிருப்பது ஃபார்மல் அப்ரைட் மாடலாகும். இது, U.S ன் நேஷனல், ஆர்போரிடமில் உள்ள ஒரு கோனிஃபர் வகை மரமாகும்.

இம்மரங்களில், அதன் நடுத்தண்டில், கீழிருந்து, மூன்றில் ஒரு பாகம் அளவுக்கு, வெளியே தெரியும் விதமாக, அதன் முதல் கிளையை அமைக்க வேண்டும். அதே போல அதன் முதல் கிளையை, மொத்த மரத்தின் உயரத்தில், மூன்றிலொரு பங்கு அளவுக்கு, நீளம் உடையதாக, மரத்திலிருந்து 90 டிக்ரி வருமாறு, ஒயரிங் செய்ய வேண்டும். அடுத்த கிளை, அதற்கு நேரெதிராக வரும்படி செய்ய வேண்டும். மேலே செல்ல செல்ல கிளையின் நீளம் குறைந்து கொண்டே வர வேண்டும். மரத்தின் மேல் நுனியில் இலைகள் அடர்ந்திருக்க வேண்டும். அதற்காக ஒரு கிளையை, மேல் நோக்கியவாறு, ஒயரிங் செய்ய வேண்டும். வருடா வருடம், மரத்தின் மேல் நுனியையும், கிளைகளையும் வெட்டி விட வேண்டும். பாங்கு பார்ப்பது, இந்த ஃபார்மல் அப்ரைட் மாடலில், சற்று சிரமமாக இருந்தாலும், சற்று மரம் முற்றிவிட்ட பின் மரம் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.

இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்று நினைக்கிறீர்களா? வளர்க்கும் முறையை மட்டும் சொன்னால் போதாதா என்று நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கிறது. ஆனால், இவற்றைத் தெரிந்து கொண்டால் தான், ஆரம்பத்தில் இருந்தே ஒயரிங்(ஒயரிங் பற்றி பிறகு சொல்கிறேன்.) செய்ய சுலபம்.

அடுத்து வருவது, இன்ஃபார்மல் அப்ரைட் ஸ்டைல். ஒரு சில மரங்கள் இயற்கையாகவே, காற்றின் காரணமாகவோ, அல்லது வெளிச்சத்தைத் தேடியோ, சற்று வளைந்து வளரும். இம்மாதிரி மரங்கள், இந்த மாடலில் வளர்க்க ஏற்றது.

இதில் நடுத்தண்டு, சற்று வலது புறமாகவோ, இடதுபுறமாகவோ, வளைந்திருக்க வேண்டும், ஆனால் ஒரு போதும் பார்ப்பவரை நோக்கி இருக்கக் கூடாது. எந்த போன்சாய் மாடலிலுமே, பார்ப்பவரை நோக்கி வளைந்திருக்குமாறு அமைக்கக் கூடாது. அப்படி அமைத்தால், நல்ல லுக் கிடைக்காது.


மாதுளை, பீச், மேப்பிள், க்ராப் ஆப்பிள் ஆகிய மரங்களை இவ்விதமாக வளர்க்கலாம். மற்றும் நிறைய மர வகைகள் இவ்விதம் வளரக் கூடியவையே.

இதையும் பார்மல் அப்ரைட் போலத்தான் வளர்க்க வேண்டும், ஆனால், தண்டுப்பகுதி மட்டும் வளைந்திருக்க வேண்டும். வளைவுக்கு எதிர்புறமாக இதன் கிளைகள் அமைய வேண்டும். அப்போது தான் பேலன்ஸ் கிடைக்கும். பார்மல் மாடலில், மரநுனியில், அடர்ந்த இலைகள் இருப்பதற்கு பதில், இதில் கீழ்புறக் கிளைகளில் அடர்வு அதிகமிருக்கும்.

படத்தில் இருப்பது இன்ஃபார்மல் அப்ரைட் மாடலாகும். இது சைனீஸ் எல்ம் வகை மரம்.

செத்துப் போன மரக்கிளைகளை அழகாக சீவி, ஒரு க்ரேஸ் லுக் கொண்டு வரும் கலைக்கு ஜப்பானிய மொழியில் ஜின் என்று கூறுவர். இவ்வாறு ஜின் அமைப்புக்கு, இன்ஃபார்மல் அப்ரைட் மாடலே ஏற்றது.

மீதி மூன்று மாடல்களையும், அடுத்த அத்தியாயத்தில், அடுத்த ஞாயிறன்று படிக்கலாம்.

4 comments:

  1. சுமஜ்லா
    போன்சாய் மரங்கள் வளர்க்கறதுல இவ்ளோ விசயம் இருக்கா? கண்டிப்பா இதெல்லாம் எனக்கு தெரியாத விசயங்கள்,இன்னும் தெரிந்துகொள்ள ஆசையா இருக்கு, தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
  2. சுகைனா இதை வளர்ப்பதில் இவ்வளவு விசயம் இருக்கா?கண்டிப்பா இதெல்லாம் தெரிந்து வளர்க்கனும்ப்பா.அடுத்த பதிவுக்காக ஞாயிற்றுக்கிழமையை எதிர்ப்பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. எனக்கு போன்சாய் மிகும் தயாவு செய்து முடிந்தால் இதை
    பற்றி எனக்கு மெயில் அநுப்பவும்
    சுந்தர் sundar.subramany@yahoo.in

    ReplyDelete
  4. This is posted during 2009?!! wow..!! why do you giveup? please continue your blogs

    ReplyDelete