போன்சாய் மரத்தில் மொத்தம் 5 வகை இருக்கிறது. அதில் முதல் இரண்டு வகை பற்றி போன அத்தியாயத்தில் பார்த்தோம். அடுத்த வகையான ஸ்லேண்டிங் ஸ்டைல் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
ஸ்லேண்டிங் வகையானது, கடுமையான காற்றின் காரணமாகவோ, அல்லது வெய்யில் தேடியோ, மரம் வளையும் போது ஏற்படுவது. இதில், மரத்தின் நடுத்தண்டு ஸ்ட்ரைட்டாகவோ, அல்லது, வளைந்து, வளைந்தோ இருக்கும்; ஆனால், அது அப்படியே ஒரு பக்கமாக சாய்ந்திருக்கும். அது எப்பக்கம் சாய்ந்திருக்கிறதோ, அதன் வேர்கள், அதற்கு எதிர்பக்கம் நோக்கி வளரும். அப்பொழுது தான் அதற்கு பேலன்ஸ் கிடைக்கும்.

எந்த வகை மரத்தை வேண்டுமானால், இந்த மாடலில் வளர்க்கலாம். எனினும், கோனிஃபெரஸ் மரங்களுக்கு இது ஏற்றது. இது பார்ப்பதற்கு கிட்டத்தட்ட இன்ஃபார்மல் அப்ரைட் மாடல் போலத் தான் இருக்கும்.
மரத்தின் வளைவு, வலது புறமாகவோ, இடது புறமாகவோ இருக்க வேண்டும். எப்போதும், நம்மை நோக்கி இருக்கக் கூடாது. அதே போல, மரத்தின் மேல் உச்சியும், கீழ் பாகமும், ஒரே நேர் கோட்டில் வரக் கூடாது.
இவ்வடிவத்தை, நாம் கொண்டு வர இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று ஒயரிங், அதாவது ஒயர் மூலம் கட்டி கொண்டு வருவது, இன்னொன்று, மரம் வைத்துள்ள தொட்டியை, கீழே ஒரு புறம் முட்டுக் கொடுத்து சற்று சாய்வாக வைத்து விட்டால், அது மேல் நோக்கி வளரும் போது, வளர்ந்த பின், நாம் தொட்டியை நேராக்கினால், மரம் சாய்வாக இருக்கும்.
அடுத்த வடிவம், கேஸ்கேட் ஸ்டைல் என்பதாகும். கேஸ்கேட் என்றால், நீர்வீழ்ச்சி என்று அர்த்தம். இந்த மாடலில், மலையிலிருந்து வழியும் நீரைப்போல, தொட்டியிலிருந்து கீழ்நோக்கி வளருவதால், இதை, நாம் கேஸ்கேட் ஸ்டைல் என்று சொல்லுகிறோம்.
இங்கேயும் எவ்வகை மரத்தை வேண்டுமானாலும் இவ்வடிவத்தில் வளர்க்கலாம். இதில் மரம், அது வைக்கப் பட்டிருக்கும், தொட்டியிலிருந்து, வழிந்து, கீழ் நோக்கி, தொட்டியை விட கீழாக இருக்கும். பார்ப்பதற்கு, இது, புவியீர்ப்பு விசையை எதிர்த்து வளருவது போல இருக்கும்.
இதை சற்று குறுகலான தொட்டியில் வளர்க்கணும். தொட்டியை, உயரமான இடத்தில் வைக்கணும். அப்பொழுது தான், மரம் கீழ் நோக்கி வளர ஏதுவாக இருக்கும். அதன் நடுத்தண்டை ஒயர் மூலம் கட்டி, கீழ் நோக்கி வளைக்க வேண்டும். ஆனால் மரத்தின் அடிப்பாக நேராக இருக்க வேண்டும். அதாவது ஆங்கில எழுத்தான 'U' தலைகீழாக இருப்பது போல இருக்க வேண்டும். இதன் கிளைகளை சரியான இடைவெளி விட்டு இருக்குமாறு அமைக்க வேண்டும்.
எவ்வகை மரமாக இருந்தாலும், சரியான படி பயிற்சி அளித்தால், இவ்வடிவத்துக்கு எளிதில் கொண்டு வந்து விடலாம்.
அடுத்து நாம் பார்ப்பது, செமி கேஸ்கேட் வகையாகும். கேஸ்கேடுக்கும், செமி கேஸ்கேடுக்கும் என்ன வித்தியாசம் என்றால், முந்திய வகை, தலைகீழ் 'U' போல வளைந்திருக்கும். இது அரைவட்டமாக கீழ் நோக்கி வளைந்திருக்கும். இதன் மேல் நுனி, தொட்டியை விடக் கீழாக இருக்காது. மலைச்சரிவுகளில், இது போன்ற வகை மரங்களைப் பார்க்கலாம்.
பூப்பூக்கும் மரங்கள், சிடார், செர்ரீஸ், ஜுனிஃபர்ஸ், போன்றவற்றை இவ்வடிவில், வளர்க்கலாம். இதையும், கேஸ்கேட் போலவே தான் ஒயரிங் மூலம் ட்ரைன் செய்யணும். ஆனால், அந்த அளவுக்கு வளைக்கக்கூடாது.
இனி அடுத்த ஞாயிறு, நாம் எப்படி, போன்சாய் மரங்களை, உற்பத்தி செய்வது, வளர்க்க ஆரம்பிப்பது என்று பார்க்கலாம்.
ஸ்லேண்டிங் வகையானது, கடுமையான காற்றின் காரணமாகவோ, அல்லது வெய்யில் தேடியோ, மரம் வளையும் போது ஏற்படுவது. இதில், மரத்தின் நடுத்தண்டு ஸ்ட்ரைட்டாகவோ, அல்லது, வளைந்து, வளைந்தோ இருக்கும்; ஆனால், அது அப்படியே ஒரு பக்கமாக சாய்ந்திருக்கும். அது எப்பக்கம் சாய்ந்திருக்கிறதோ, அதன் வேர்கள், அதற்கு எதிர்பக்கம் நோக்கி வளரும். அப்பொழுது தான் அதற்கு பேலன்ஸ் கிடைக்கும்.

எந்த வகை மரத்தை வேண்டுமானால், இந்த மாடலில் வளர்க்கலாம். எனினும், கோனிஃபெரஸ் மரங்களுக்கு இது ஏற்றது. இது பார்ப்பதற்கு கிட்டத்தட்ட இன்ஃபார்மல் அப்ரைட் மாடல் போலத் தான் இருக்கும்.
மரத்தின் வளைவு, வலது புறமாகவோ, இடது புறமாகவோ இருக்க வேண்டும். எப்போதும், நம்மை நோக்கி இருக்கக் கூடாது. அதே போல, மரத்தின் மேல் உச்சியும், கீழ் பாகமும், ஒரே நேர் கோட்டில் வரக் கூடாது.
இவ்வடிவத்தை, நாம் கொண்டு வர இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று ஒயரிங், அதாவது ஒயர் மூலம் கட்டி கொண்டு வருவது, இன்னொன்று, மரம் வைத்துள்ள தொட்டியை, கீழே ஒரு புறம் முட்டுக் கொடுத்து சற்று சாய்வாக வைத்து விட்டால், அது மேல் நோக்கி வளரும் போது, வளர்ந்த பின், நாம் தொட்டியை நேராக்கினால், மரம் சாய்வாக இருக்கும்.
அடுத்த வடிவம், கேஸ்கேட் ஸ்டைல் என்பதாகும். கேஸ்கேட் என்றால், நீர்வீழ்ச்சி என்று அர்த்தம். இந்த மாடலில், மலையிலிருந்து வழியும் நீரைப்போல, தொட்டியிலிருந்து கீழ்நோக்கி வளருவதால், இதை, நாம் கேஸ்கேட் ஸ்டைல் என்று சொல்லுகிறோம்.
இங்கேயும் எவ்வகை மரத்தை வேண்டுமானாலும் இவ்வடிவத்தில் வளர்க்கலாம். இதில் மரம், அது வைக்கப் பட்டிருக்கும், தொட்டியிலிருந்து, வழிந்து, கீழ் நோக்கி, தொட்டியை விட கீழாக இருக்கும். பார்ப்பதற்கு, இது, புவியீர்ப்பு விசையை எதிர்த்து வளருவது போல இருக்கும்.இதை சற்று குறுகலான தொட்டியில் வளர்க்கணும். தொட்டியை, உயரமான இடத்தில் வைக்கணும். அப்பொழுது தான், மரம் கீழ் நோக்கி வளர ஏதுவாக இருக்கும். அதன் நடுத்தண்டை ஒயர் மூலம் கட்டி, கீழ் நோக்கி வளைக்க வேண்டும். ஆனால் மரத்தின் அடிப்பாக நேராக இருக்க வேண்டும். அதாவது ஆங்கில எழுத்தான 'U' தலைகீழாக இருப்பது போல இருக்க வேண்டும். இதன் கிளைகளை சரியான இடைவெளி விட்டு இருக்குமாறு அமைக்க வேண்டும்.
எவ்வகை மரமாக இருந்தாலும், சரியான படி பயிற்சி அளித்தால், இவ்வடிவத்துக்கு எளிதில் கொண்டு வந்து விடலாம்.
அடுத்து நாம் பார்ப்பது, செமி கேஸ்கேட் வகையாகும். கேஸ்கேடுக்கும், செமி கேஸ்கேடுக்கும் என்ன வித்தியாசம் என்றால், முந்திய வகை, தலைகீழ் 'U' போல வளைந்திருக்கும். இது அரைவட்டமாக கீழ் நோக்கி வளைந்திருக்கும். இதன் மேல் நுனி, தொட்டியை விடக் கீழாக இருக்காது. மலைச்சரிவுகளில், இது போன்ற வகை மரங்களைப் பார்க்கலாம்.
பூப்பூக்கும் மரங்கள், சிடார், செர்ரீஸ், ஜுனிஃபர்ஸ், போன்றவற்றை இவ்வடிவில், வளர்க்கலாம். இதையும், கேஸ்கேட் போலவே தான் ஒயரிங் மூலம் ட்ரைன் செய்யணும். ஆனால், அந்த அளவுக்கு வளைக்கக்கூடாது.இனி அடுத்த ஞாயிறு, நாம் எப்படி, போன்சாய் மரங்களை, உற்பத்தி செய்வது, வளர்க்க ஆரம்பிப்பது என்று பார்க்கலாம்.
Good and interesting too.Yes, I think it needs too much patience, right?
ReplyDeleteஎன்னுடைய course agriculture என்பதால் அதனில் சில horticulture papers உண்டு.coarse முடித்து 19 வருடங்கள் ஆகிவிட்டது,எல்லாம் மறந்து போன நிலையில் இப்போது நினைவூட்டிவிட்டீர்கள்.
ReplyDeleteஆஹா, போச்சுடா, நாம எதாவது தப்பா, எழுதிட்டா, இங்க ஒரு மிஸ் இருக்காங்க பிரம்போட.
ReplyDeleteஎனக்கே எல்லாம் புதிதாய் தெரிகிறது,இந்த மிஸ் பாவம்.நானும் உங்கள் மூலம் refresh பண்ணிக்கொள்கிறேன்.படங்கள் சூப்பர்.
ReplyDeleteyeppodhu ilaigal siriyadhaga maarum bosai valarpil....?
ReplyDeletepoduvanga bosai marangal eyalbai vida siriya ilia poo matrum pazhangalai kondulladhe adhu yeppadi?
Thank u my Dear, boonsai plat,oyars angu kidaikkum i am in salem
ReplyDelete