போன்சாய் என்றால் என்ன?

போன்சாய் என்றால் குட்டியே குட்டியூண்டு மரங்கள், அதாவது பெரிய மரங்களை குட்டி சைஸில் சின்ன தட்டில் மண் போட்டு வளர்ப்பது. நம்மூர் ஆல மரம், அரச மரத்தைக் கூட இவ்வாறு வளர்க்கலாம். இந்த தொடரின் மூலம், நாம் எப்படி போன்சாய் மரங்கள் வளர்ப்பது, எப்படி பராமரிப்பது என்று பார்க்கலாம்.

போன்சாய் வளர்ப்பதென்பது தோட்டக்கலை மட்டுமல்ல. ஒரு அழகுக் கலையும் கூட. மிகவும் ரசித்துச் செய்ய வேண்டிய கலை. நம் அழகுணர்ச்சி அதில் வெளிப்படும் என்றால் மிகையல்ல. போன்சாய் என்ற ஜப்பானிய சொல், புன்சாய் என்ற சீனமொழிச் சொல்லில் இருந்து வந்தது. அதன் அர்த்தம், தொட்டிமரம் என்பதாகும், அதாவது சிறு தொட்டியில் வளர்க்கப் படும் மரம் என்று பொருள்.

நிறைய பேர் நினைப்பது போல, போன்சாய் என்பது இயற்கையிலேயே குட்டியாக வளரும் மரம் அல்ல. அதுவும் சாதாரண மரம் தான், ஆனால் குட்டியாக இருக்கும் படி அது பழக்கப் படுத்தப் படுகிறது. அதற்காக அதை நாம் கொடுமைப் படுத்துவதாக பொருளல்ல; வழக்கம் போல அதற்கும் நாம் தண்ணீர், காற்று, மண், சூரிய ஒளி, இன்னும் பிற தேவையான சத்துக்கள் தருகிறோம். ஆனால், பெரிதாக வளர விடாமல், அவ்வப்போது செதுக்கி விடுகிறோம். அது தான் இதன் சூட்சுமம்.

போன்சாய் மரங்கள், அரை அடி உயரத்தில் இருந்து, மூன்று அடி உயரம் வரை வளர்க்கப் படுகிறது. இம்மரங்களிலும், பூப்பூக்கும், காய் காய்க்கும். ஆனால், மரத்தை அவ்வப்போது செதுக்காவிட்டால், அது பெரிய மரமாக வளர ஆரம்பித்து விடும்.

சிறிய தட்டில், குட்டியூண்டு பெரிய மரத்தைப் பார்க்கும் போது, மிக அழகாகவும், இயற்கையாகவும் தோன்றும்.

போன்சாய் மரங்களை விதை போட்டும் வளர்க்கலாம், அல்லது கட்டிங்ஸ் மூலமும் வளர்க்கலாம். ஆனால் மிக பாங்காக எல்லாம் செய்யணும். அதை செதுக்கி, இலைகளை கிள்ளி, ஒயர் போட்டு தண்டுகளை கட்டி, நாம் விரும்பிய வடிவில் கொண்டு வரணும். கொஞ்சம் தவறினாலும் செடி செத்துவிடும். அதன் வாழ்நாள் பூராவும், நம் கவனம் அதன் மேல் தேவை, இல்லாவிட்டால் பெரிதாக வளர தொடங்கிவிடும். சில மரங்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கூட உயிர் வாழும்; ஆனால், எத்துணை ஆண்டுகள் என்பது முக்கியமல்ல, மரத்தில் தோற்றம், மற்றும் அது வைக்கப் பட்டிருக்கும் தொட்டியின் அழகு ஆகியவை பார்ப்பதற்கு ஒன்றுக்கொன்று எடுப்பாக இருக்க வேண்டும்.

எந்த மரத்தை வேண்டுமானால் தேர்ந்தெடுத்து, போன்சாய் ஆக வளர்க்கலாம். ஜப்பானில், பைன், பேம்பூ, ப்ளம், கமேலியா போன்ற மரங்களை அதிகமாக வளர்க்கிறார்கள். அதிகமாக போன்சாய் மரங்கள் சூரிய ஒளியில் தான் வளர்க்கப் படுகின்றன. ஆனால் ஒரு சில மரங்கள், நிழலில் வளர பழக்கப் படுத்தப் படுகின்றன.

போன்சாய் வளர்ப்பதற்கு பெரிய செலவு ஒன்றுமில்லை. ஆனால், நிறைய பொறுமையும், விடாமுயற்சியும், டைம் மேனேஜ்மெண்டும் தேவை. இதை ஒரு ஹாபியாக செய்தால், நிச்சயம் நம்மால் முடியும்.

இனி ஒவ்வொரு வாரமும் (ஞாயிறு தோறும் படிக்கலாம்), போன்சாயின் வரலாறு, அதை வளர்க்கும் முறை, அதை எப்படி செதுக்குவது, எப்படி ஒயரிங் செய்வது, எப்படி நீரூற்றுவது போன்ற விஷயங்களை ஒரு தொடராக தருகிறேன்.

-சுமஜ்லா

35 comments:

  1. ஹாய் சுமஜ்லா எப்படி இருக்கீங்க.
    போன்சாய் பற்றிய விசயங்கள் ரொம்ப உபயோகமா இருக்கு.நிஜமாவே நிறைய விசயம் தெரிஞ்சுகிட்டேன்.இனி வருவதையும் ஆவலா பார்த்துட்டு இருக்கேன்.

    ReplyDelete
  2. ஹாய் கவி,
    எழுதுவது சுலபம்ப்பா, ஆனா டைப் செய்வது தான் கஷ்டம். அதனால்தான் ஒவ்வொரு ஞாயிறு. நமக்கென ஒரு வாசகர் கூட்டம் உருவாகும் போது தான் அதிகம் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது.

    ReplyDelete
  3. சுமஜ்லா
    உங்க எழுத்துக்கு போய் வாசகர்கள் வராம இருப்பாங்களா? நிறைய எழுதுங்க, படிக்க ஆவலா இருக்கோம்.

    ReplyDelete
  4. ஹாய் சுஹைனா ரொம்ப நல்ல தகவல். போன்சாய் பற்றி நானும் கவி போல அறிந்து கொண்டேன். வாழ்த்துக்கள் சுஹைனா

    ReplyDelete
  5. நல்ல தகவல். ஆனால் எனகு மரத்தை கொடுமை படுத்துகிறோமா என்று கவலை. வளரவிடாமல் செதுக்கி கொண்டே இருக்க வேண்டுமல்லவா. அது தான் கவலை. அதை பற்றியும் கூறுங்களேன்.

    ReplyDelete
  6. அன்பு கவின், இதே எண்ணம் தான் எனக்கும். ஆனால், பல மரங்களை வெட்டி விட்டால் தானே நன்றாக வளரும். அது போல கலை அழகுக்காக செய்ய்க் கூடிய விஷயம் இது. நான் பல விஷயங்களையும் எழுத நினைத்திருப்பதால், ஒவ்வொரு ஞாயிறும், தொடராக இதைப் படிக்கலாம்(நேரமின்மை தான் காரணம் தோழி).

    ReplyDelete
  7. நீங்கள் கூறும் இந்த விஷயம் என்னக்கு சரியாக படலை காரணம் என்றைய சூழ் நிலைகள் மரத்தில் இருந்து வரும் பிரணவாயு மனிதர்களுக்கு முக்கியம் அப்படி பயன்படும் மரத்தை நீங்கள் சொல்ல்வது போல இருக்குமே ஆனால் இந்த மரத்தினால் பயன் ஏதும் இல்லை மரத்தால் இன்றைய நிலைக்கு தகுந்தார் போல் கூறினால் நலமாக இருக்கும் வணக்கம் உங்கள் நண்பன்

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். இது சைனீஸ் கொண்டு வந்த முட்டாள்தனம். அவன் நம் மூலையை மழுங்கடித்து விட்டான். சைனா பொருட்களை நாட்டில் தடை செய்தால் தான் பலவும் நம்மால் சாதிக்க முடியும். செடிகளை வளர்ப்பதில் சாதனை படைக்க வேண்டிய காலத்தில் வெட்டிவிடுவதில் PHD வாங்க முயற்சிக்கலாமா?

      Delete
  8. என் மனதில் பட்டதை கூறினேன் தவறாக நினைக்க வேண்டாம்

    ReplyDelete
  9. அன்பரே,
    நான் போன்சாய் வளருங்கள் என்று சொல்ல வில்லை. ஆனால் எப்படி வளர்ப்பது என்று தான் சொல்கிறேன். ஒரு பழம் பெரும் கலையை அறிந்து கொள்ள, அது பற்றி எழுதுகிறேன். மற்றபடி, அதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது அவரவர் பொறுத்தது.
    உங்கள் மனதில் பட்டதை எழுதியிருக்கிறீர். அதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது?
    -சுஹைனா.

    ReplyDelete
  10. nice post...can u explain in details how can i grow Bonsai in my home and where can i get these seeds?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே.. போன்சாய் என்பது, நாட்டில் மரங்கள் கொழுத்து கிடந்தால் ஒரு ஓரமாக வளர்க்க அழகு மரமாகலாம். ஆனால் நம் நாட்டிற்கு தேவை போன்சாய் அல்ல. அரசும் ஆலமரமும் தான்.

      Delete
  11. thankyou sivakumar! The same seeds are used for bonsai also. These details I collected from various sources, however, i dont have the experience. I tried many times, but dont have patience and time.

    ReplyDelete
    Replies
    1. hai naan maa marathai bonsai muraiyil vlarka virumpukindran atharku enaku tips kodungal

      Delete
  12. Dear Sumaijala,
    I want ot know more about Bonsai... Please keep writing.
    We love art...we live with art...
    The only thing prove that we have heart.
    With luv,
    Rtn Kumaran L

    ReplyDelete
  13. சுமஜ்லா கலக்கிட்டிங்க... நான் மூனுநாளா நெட்டில் தேடியதை நீங்க உங்க சைட்டில் சிம்பிலா கொடுத்திட்டீங்க... மிக்க நன்றி...

    ReplyDelete
  14. போன்சாய் மரங்கள் பற்றி இவ்வளவு தகவல்கள் கொடுத்ததற்க்கு
    நன்றி……… நன்றி….. நன்றி…..

    இந்த தகவல்கலுக்காக நான் பல வருடங்களாக பல நபர்களிடம் கேட்டு தேடி அழைந்தேன், இப்பொழுது உங்கள் பக்கத்தில் மிக எளிதாக தெரிந்து கொண்டேன்….

    மிக மிக நன்றி…..நன்றி….. நன்றி…..


    சேகர்,

    ReplyDelete
  15. Thanks for your valuable info about bonsai. Please continue your writing, why can't you share some videos in your blogs.

    ReplyDelete
  16. naan maa marathai bosai murayil valarka ninaikindran atharku enaku uthavungal

    ReplyDelete
  17. வணக்கம் சுமஜ்லா.
    அரளி செடியை போன்சாய் முறையில் வளர்க்கலாமா ?

    ReplyDelete
  18. போன்சாய் மரங்கள் தகவல்கள் அருமை
    நன்றி……

    ReplyDelete
  19. போன்சாய் என்பது கொடுமை... குழந்தை அழகாக இருக்க வேண்டுமா? நன்றாக வளரவேண்டுமா? குழந்தை அழகாக உள்ளது என்பதற்காக வளரவிடாமல் ஹார்மோன் ஊசி போட்டு போட்டு குழந்தையாகவே வைத்திருக்கலாமா?????

    ReplyDelete
  20. போன்சாய் வளர்க்க விரும்புகிறேன் இதற்கு பயிற்சி எங்கு கிடைக்கும். பராமரிப்புக்குத் தேவையான உபகரணம் எங்கு கிடைக்கும்.

    ReplyDelete
  21. போன்சாய் வளர்க்க விரும்புகிறேன் இதற்கு பயிற்சி எங்கு கிடைக்கும். பராமரிப்புக்குத் தேவையான உபகரணம் எங்கு கிடைக்கும்.

    ReplyDelete
  22. mediahuman-youtube-downloader-crack is a program available for those who have noticed a favorite song, video, or trailer for a new movie and want to keep it for their laptop for offline viewing.

    freeprokeys

    ReplyDelete
  23. ntlite-crackcan be just really a rather productive and useful tool for the personalization of managing techniques. For that, you can make your variant of the system. It helps the consumer or perhaps maybe not mandatory components
    new crack.

    ReplyDelete
  24. This article is so innovative and well constructed I got lot of information from this post. Keep writing related to the topics on your site. Avira Free Antivirus Pro Crack

    ReplyDelete
  25. I really like your site. Fantastic colors and themes.
    Did you create this site yourself? Reply again because I hope to create my own
    site itself and I would like to know where you have come to
    it is here or where the item is named from.
    Thank you!
    internet download manager crack
    little snitch crack
    efootball pes 2022 crack
    photopad image editior pro crack

    ReplyDelete
  26. This is a great moment to think about the future and to be cheerful, because now is the best time.
    I've just finished reading it and wished to provide some suggestions for stuff you might be interested in.
    It's possible to write further articles based on this one.
    This intrigues me and I'd like to learn more!
    aiseesoft screen recorder with crack
    luminar photo editor crack
    little snitch crack
    hitmanpro crack

    ReplyDelete
  27. I would like to join.
    communities where people can learn from others who share their interests and knowledge.
    Feel free to share your thoughts with us if you have any. It is so nice of you!
    advanced systemcare ultimate crack
    kaspersky antivirus crack
    total network inventory crack
    sublime text crack

    ReplyDelete
  28. I am very impressed with your post because this post is very beneficial for me and provide a new knowledge to me. this blog has detailed information, its much more to learn from your blog post.I would like to thank you for the effort you put into writing this page.
    I also hope that you will be able to check the same high-quality content later.Good work with the hard work you have done I appreciate your work thanks for sharing it. It Is very Wounder Full Post.This article is very helpful, I wondered about this amazing article.. This is very informative.
    “you are doing a great job, and give us up to dated information”.
    windows-10-crack/
    master-pdf-editor-crack/
    cleanmypc-crack/
    adobe-xd-crack/
    pitrinec-perfect-keyboard-professional-crack-2/

    ReplyDelete