போன்சாய் பராமரிப்பு

எல்லாரும் நினைப்பது போல போன்சாய் பராமரிப்பு என்பது ரொம்ப கடினமான விஷயமல்ல. நீர் ஊற்றுவது, உரமிடுவது, தொட்டி மாற்றுவது போன்ற ஒரு சில விஷயங்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது.

முதலில் நீர் ஊற்றுவது. நீர் ஊற்றுவது என்பது மரத்தில் வகையைப் பொறுத்து மாறுபடும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நீரூற்ற வேண்டியது இல்லை. நாம் விரலை மண்ணில் விட்டுப் பார்த்தால், ஒரு அரை இன்ச் ஆழம் வரை காய்ந்து போய் இருந்தால் நீர் ஊற்ற வேண்டும்.

நீரை அப்படியே சட சட வென்று ஊற்றாமல், தெளிப்பது போல சிறிது சிறிதாக ஊற்ற வேண்டும். இல்லாவிட்டால், நீரின் வேகத்தில் மண் அடித்து செல்லப்பட்டு விடும். மதிய நேரத்தில் ஊற்றாமல், காலை அல்லது மாலையில் ஊற்ற வேண்டும். அதே சமயம், நீரானது, எல்லா வேர்களும் நனையும் வகையில், அதிகப்படி நீர் வெளியேறும் ஓட்டை வழியாக வெளியேறும் வரை ஊற்ற வேண்டும். மழை நீரை சேகரித்து வைத்து ஊற்றினால் நல்லது.

அடுத்தது உரமிடுதல். நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் என மூவகை உரங்கள் மரத்துக்கு முக்கியம். மற்ற மரங்களில் வேர்கள் அதற்கான சத்து கிடைக்கும் இடம் நோக்கி வளர்ந்து கொள்ளும். ஆனால் போன்சாயானது, நாம் சிறு தொட்டியில் வளார்ப்பதால், உரமிடுவது மிக அவசியம். நைட்ரஜன் இலை, கிளை வளர்ச்சிக்கும், பாஸ்பரஸ் வேர்களின் ஆரோக்கியத்துக்கும், பொட்டாசியம் பூக்கள் காய்களின் காய்ப்புக்கும் மிக அவசியமானது.

நாம் வருடத்தின் எக்காலத்தில் உரமிடுகிறோமோ, அதைப் பொறுத்து, நாம் உரமிடும் கலவை மாறுபடும். இலையுதிர் காலத்தில் நைட்ரஜன் அளவு குறைவாகவும், வசந்த காலத்தில் நைட்ரஜன் அளவு கூடுதலாகவும் இட வேண்டும். வெயில் காலத்தில் சரிவிகிதமாக உரமிட வேண்டும். மரம் சற்று முதிர்ந்து விட்டால், வளர்ச்சிக்கான நைட்ரஜன் விகிதத்தை குறைத்துக் கொள்ளணும். அதே சமயம் பூப்பூக்கும் காலத்தில், பொட்டாசியம் அளவைக் கூட்டிக் கொள்ளணும்.

அடுத்த விஷயம் தொட்டி மாற்றுதல். தொட்டி மாற்றுவதால், நம் போன்சாய் மரம் சிறியதாகாது, மாறாக, அது புது சத்துக்கள் கிடைக்க உதவுகிறது. ஆரம்பத்தில் வேகமாக வளரும் மரமாக இருந்தால், இரு வருடம், இன்னும் சொல்லப்போனால் ஒரு வருடத்துக்கொரு முறை தொட்டி மாற்ற வேண்டும். கொஞ்சம் மரம் வயதாகி விட்டால் பின் 3 அல்லது 5 வருடத்துக்கொரு முறை மாற்றினால் போதும். வசந்த காலம் ஆரம்பிக்கும் முன் தொட்டி மாற்றிவிட வேண்டும். அப்போ தான் அதனால் ஏதும் சேதம் ஏற்பட்டால் கூட விரைவில் வளர்ந்து விடும்.

தொட்டி மாற்றும் போது, வேர்களில் இருக்கும் மண்ணை லேசாக உதிர்த்து விடணும். பிறகு வேறொரு தொட்டியில் மக்கிய உரம், மணல், மற்றும் செம்மண் கலவையில் அதை ஊன்ற வேண்டும். மண் கலவை நீரை நன்கு உறிஞ்சும் தன்மையதாக இருக்க வேண்டும். சிறிது மண்ணை தொட்டியில் போட்டு, பின் அதில் மரத்தை வைத்து, அதன் மேல் மீதி மண்ணைப் போட வேண்டும். மண்ணில் ஊன்றும் முன், அதன் வேர்களை வெட்டிவிட வேண்டும். மிக நீளமான வேர்கள் மற்றும் அழுகிப் போன வேர்களை லேசாக நறுக்கிவிட வேண்டும். தொட்டி மாற்றிய பிறகு, இரு மாதங்களுக்கு, அம்மரத்தை கடுமையான காற்று மற்றும் கடுமையான வெப்பத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.

இம்முறைகளை பின்பற்றி நாம் பராமரித்தால், எவ்வகை மரத்தை வேண்டுமானால் போன்சாயாக வளர்க்கலாம்.

-சுமஜ்லா

13 comments:

  1. அருமையாக விளக்கி சொல்லி இருக்கீங்க,NPK அதாங்க நைட்ரஜன்,பாஸ்பரஸ்,பொட்டாசியம் எப்படி பகிர்ந்து அளிப்பது என்ற விபரமும் சூப்பர்.

    ReplyDelete
  2. சுமஜ்லா இப்படி பார்த்து பார்த்து செடி வெச்சு அது நல்லா வரும்போது வரும் சந்தோஷம் இருக்கே....,
    போன்சாய் உங்க வீட்டில் இருக்கா?இந்த செடி வைக்கும்போது தொட்டி எந்த சைசில் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  3. தேங்க்யூ அக்கா,
    கவி, இப்போ தான்பா, முருங்கையை சோதனை பண்ணிட்டு இருக்கேன். தொட்டி என்பது நான் சாதாரணமாக வைக்கும் பூந்தொட்டியில், சிறியதை சூஸ் பண்ணனும். பிறகு கொஞ்சம் வளர்ந்ததும், இருக்க இருக்க சிறியதற்கு பழக்கப்படுத்தணும். அதாவது, சிறிய தட்டு போல படத்தில் இருக்குமே, அது தான் ஃபைனல்.

    ReplyDelete
  4. ஓஓ சுமஜ்லா முருங்கைகாயா,அது செடியவிட காய் பெருசா இருக்குமே எப்படி??

    ReplyDelete
  5. keep posting more about bonsai....

    g. nagarajan

    ReplyDelete
  6. enakkum bonsai valarka viruppam than, na bonsai eppadi valakarathu nu netla thedum pothu unga website parthen romba arumaya irukku thodarnthu ezhuthunga nandri........

    ReplyDelete
  7. Na bonsai maram vallarka asai pattu allamaram onru thotiyel vaithu vallarka arambithuvetan appodhu than ungal bonsai vallarpu murai tharindhu kondan eni neengal sonadhai polla vallarkiran.Edhai polla thodarnthu ezhuthunga romba nandri.

    ReplyDelete
  8. போன்சாய் என்றால் என்ன?
    போன்சாய் என்றால் குட்டியே குட்டியூண்டு மரங்கள், அதாவது பெரிய மரங்களை குட்டி சைஸில் சின்ன தட்டில் மண் போட்டு வளர்ப்பது. நம்மூர் ஆல மரம், அரச மரத்தைக் கூட இவ்வாறு வளர்க்கலாம். இந்த தொடரின் மூலம், நாம் எப்படி போன்சாய் மரங்கள் வளர்ப்பது, எப்படி பராமரிப்பது என்று பார்க்கலாம்.

    போன்சாய் வளர்ப்பதென்பது தோட்டக்கலை மட்டுமல்ல. ஒரு அழகுக் கலையும் கூட. மிகவும் ரசித்துச் செய்ய வேண்டிய கலை. நம் அழகுணர்ச்சி அதில் வெளிப்படும் என்றால் மிகையல்ல. போன்சாய் என்ற ஜப்பானிய சொல், புன்சாய் என்ற சீனமொழிச் சொல்லில் இருந்து வந்தது. அதன் அர்த்தம், தொட்டிமரம் என்பதாகும், அதாவது சிறு தொட்டியில் வளர்க்கப் படும் மரம் என்று பொருள்.

    நிறைய பேர் நினைப்பது போல, போன்சாய் என்பது இயற்கையிலேயே குட்டியாக வளரும் மரம் அல்ல. அதுவும் சாதாரண மரம் தான், ஆனால் குட்டியாக இருக்கும் படி அது பழக்கப் படுத்தப் படுகிறது. அதற்காக அதை நாம் கொடுமைப் படுத்துவதாக பொருளல்ல; வழக்கம் போல அதற்கும் நாம் தண்ணீர், காற்று, மண், சூரிய ஒளி, இன்னும் பிற தேவையான சத்துக்கள் தருகிறோம். ஆனால், பெரிதாக வளர விடாமல், அவ்வப்போது செதுக்கி விடுகிறோம். அது தான் இதன் சூட்சுமம்.

    போன்சாய் மரங்கள், அரை அடி உயரத்தில் இருந்து, மூன்று அடி உயரம் வரை வளர்க்கப் படுகிறது. இம்மரங்களிலும், பூப்பூக்கும், காய் காய்க்கும். ஆனால், மரத்தை அவ்வப்போது செதுக்காவிட்டால், அது பெரிய மரமாக வளர ஆரம்பித்து விடும்.

    சிறிய தட்டில், குட்டியூண்டு பெரிய மரத்தைப் பார்க்கும் போது, மிக அழகாகவும், இயற்கையாகவும் தோன்றும்.

    போன்சாய் மரங்களை விதை போட்டும் வளர்க்கலாம், அல்லது கட்டிங்ஸ் மூலமும் வளர்க்கலாம். ஆனால் மிக பாங்காக எல்லாம் செய்யணும். அதை செதுக்கி, இலைகளை கிள்ளி, ஒயர் போட்டு தண்டுகளை கட்டி, நாம் விரும்பிய வடிவில் கொண்டு வரணும். கொஞ்சம் தவறினாலும் செடி செத்துவிடும். அதன் வாழ்நாள் பூராவும், நம் கவனம் அதன் மேல் தேவை, இல்லாவிட்டால் பெரிதாக வளர தொடங்கிவிடும். சில மரங்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கூட உயிர் வாழும்; ஆனால், எத்துணை ஆண்டுகள் என்பது முக்கியமல்ல, மரத்தில் தோற்றம், மற்றும் அது வைக்கப் பட்டிருக்கும் தொட்டியின் அழகு ஆகியவை பார்ப்பதற்கு ஒன்றுக்கொன்று எடுப்பாக இருக்க வேண்டும்.

    எந்த மரத்தை வேண்டுமானால் தேர்ந்தெடுத்து, போன்சாய் ஆக வளர்க்கலாம். ஜப்பானில், பைன், பேம்பூ, ப்ளம், கமேலியா போன்ற மரங்களை அதிகமாக வளர்க்கிறார்கள். அதிகமாக போன்சாய் மரங்கள் சூரிய ஒளியில் தான் வளர்க்கப் படுகின்றன. ஆனால் ஒரு சில மரங்கள், நிழலில் வளர பழக்கப் படுத்தப் படுகின்றன.

    போன்சாய் வளர்ப்பதற்கு பெரிய செலவு ஒன்றுமில்லை. ஆனால், நிறைய பொறுமையும், விடாமுயற்சியும், டைம் மேனேஜ்மெண்டும் தேவை. இதை ஒரு ஹாபியாக செய்தால், நிச்சயம் நம்மால் முடியும்.

    ReplyDelete
  9. Bonsai maram vittula vaykalaama ? Aalamaram engiraargalee!

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. மிக்க நன்றி, தங்களின் பகிர்வுக்கு...
    ஒரே ஒரு விளக்கம் தேவை,
    செடியின் நுனி பகுதியை கிள்ளிவிடும் போதோ அல்லது வேரினை வெட்டி விடும் போதோ செடிகள் செத்து போகாமல் பராமரிப்பது எப்படி, விளக்குங்களேன் Please...

    ReplyDelete
  12. Thanks for the information about BONSAI. I need the information about to protect this tree from diseases.

    ReplyDelete